shadow

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் கோபாலபுரம் கோலாகலம்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக திமுகவினர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம் வீடு வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றது

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்கள் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இன்று காலை புத்தாடை அணிந்து, பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரிடம், அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கருணாநிதிக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பழ.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்பட பலர் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.

இதேபோல் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply