ஐபிஎல் போட்டியில் இன்று: சென்னை vs கொல்கத்தா!

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் இரண்டாம் கட்டமாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் மும்பை மற்றும் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ள சென்னையும் அதே மும்பை மற்றும் பெங்களூர் அணியை வீழ்த்திய கொல்கத்தாவும் இன்று மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மற்றும் கொல்கத்தா இடையே நடைபெறும் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மீண்டும் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் அதேபோல் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இரண்டு அணிகளும் இந்த தொடரில் தொடர் வெற்றியை பெற்று வரும் நிலையில் இன்று முதல் தோல்வி பெறப்போகும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சென்னை அணியை பொறுத்தவரை நீண்ட பேட்டிங் வரிசையை இருக்கிறது என்றும் அதேபோல் கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது