இன்று போகி கொண்டாட்டம்: சென்னையில் புகைமூட்டம்!

தை தைத்திங்கள் பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழ்சக்கம்

இந்த தினத்தில் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம்

இந்த நிலையில் நாளை தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலை வரவேற்கும் விதமாக சிறுவர் சிறுமியர்கள் மேளம் அடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை வைத்து எடுத்தால் சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.