shadow

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
துலாம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Leave a Reply