shadow

 7மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்துச் செல்லும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
துலாம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஷேர் பணம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மீனம்
புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

Leave a Reply