shadow

astrologyஇன்றைய ராசிபலன் 24/11/2015

மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
துலாம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மகரம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

Leave a Reply