shadow

இன்றைய ராசிபலன் 21/06/2016

astrologyமேஷம்
காலை 7.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் ரிஷபம்
காலை 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் கன்னி
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விசஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்
காலை 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பகல் முதல் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு
காலை 7.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்
பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Leave a Reply