shadow

இன்றைய ராசிபலன்கள் 20/02/2017

 மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
பிரியமானவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *