shadow

இன்றைய ராசிபலன்கள் 19/10/2016

astrologyமேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன் & மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்
அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Leave a Reply