shadow

 daily rasipalanமேஷம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சகோதர வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் ஈகோப் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
கன்னி
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
துலாம்
சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு ஆதரவுக் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

Leave a Reply