இன்றைய ராசிபலன். 18/06/2015

astrologyமேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். வீசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் %8திக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
பிரச்னைகளின் ஆனிவேரைக் கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Leave a Reply