shadow

இன்றைய ராசிபலன்கள் 14/05/2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை,ஆபரணம் சேரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். முகப்பொலிவுக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை,அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம்,எரிச்சல் அடையலாம். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள்,நண்பர்களால் அனுகூலம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்

Leave a Reply