shadow

இன்றைய ராசிபலன் 12/06/2016

astrologyமேஷம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்
எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் டென்ஷன் அதிகமாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் கடகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் சிம்மம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதிலே சின்ன சின்ன சஞ்சலங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை, ஆர்வமின்மை வந்துப் போகும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியக் கூடும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வந்துப் போகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் துலாம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

ராசி குணங்கள் தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யகோத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் தலைத்தூக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் கும்பம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மீனம்
வர வேண்டி பணம் கைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *