shadow

astrologyமேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்&மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்ட்£ம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். அலைச்சல் அதிகரிக்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
துலாம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்க்ள. சொந்த&பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தொட்டது துலங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். கனவு நனவாகும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயருவீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்

Leave a Reply