shadow

இன்றைய ராசிபலன் 07/09/2016

astrologyமேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்கரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் ரிஷபம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் மிதுனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெவடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் கடகம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடைவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் கன்னி
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் துலாம்
இரவு 6.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இரவு 6.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் தனுசு
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சொந்த&பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மகரம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களின் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் கும்பம்
சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் மீனம்
இரவு 6.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

Leave a Reply