shadow

7

மேஷம்
காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரம் வேண்டாம். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்

ராசி குணங்கள்
ரிஷபம்
காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற ஒரு அச்சம் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே

ராசி குணங்கள்
மிதுனம்
கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உதவிக் கேட்டு நண்பர்களும், உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
சிம்மம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்

ராசி குணங்கள்
கன்னி
காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனமுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதிய எண்ணங்கள் தோன்றும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள்
துலாம்
காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள்
விருச்சிகம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள்
தனுசு
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள்
மீனம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை

Leave a Reply