இன்று 5வது ஒருநாள் போட்டி: வாஷ் அவுட் ஆகுமா இலங்கை?

இன்று 5வது ஒருநாள் போட்டி: வாஷ் அவுட் ஆகுமா இலங்கை?

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி தொடரை வென்றுவிட்ட நிலையில் ஒருநாள் போட்டியிலும் 4 வெற்றியை பதிவு செய்துவிட்டது. இன்று நடைபெறும் 5வது மற்றும் இறுதி போட்டியிலும் இந்தியா வென்றால் இலங்கைக்கு வாஷ் அவுட் நிலைமை ஏற்படும்

இலங்கை அணியினர் மீது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளதால் இன்று ஆறுதல் வெற்றி பெற்று ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை வீரர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கடந்த சில போட்டிகளில் அசத்தி வரும் இந்திய அணிக்கு இந்த போட்டியையும் வெல்வது எந்தவித சிரமமும் இருக்காது என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். இன்றைய போட்டி இந்தியாவுக்கு மேலும் ஒரு போட்டியாக இருந்தாலும் இலங்கைக்கு முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.