இன்று இறுதி டி-20 போட்டி: தொடரை வெல்வது யார்?

இன்று இறுதி டி-20 போட்டி: தொடரை வெல்வது யார்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் போட்டியில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி போட்டி கேப்டவுன் நகரில் நடைபெறவுள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். அதுமட்டுமின்றி இன்றுடன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் இந்திய அணிக்கு முடிகிறது.

இந்திய அணியை பொருத்தவரையில் தொடர்க்க வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் விராத் கோஹ்லி ரன் அடிக்கும் போட்டியில் வெற்றி கிடைத்து வருகிறது. தோனி, பாண்ட்யா, ரெய்னா ஆகியோர் மிடில் ஆர்டரில் ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சை பொருத்தவரையில் பும்ரா, புவனேஷ்குமார், தாக்கூர், குல்தீப் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். டிவில்லியர்ஸ், க்ளாசன், ஆகியோர் நம்பிக்கை தரும் பேட்ஸ்மேன்கள். மேலும் சொந்த மைதானம் என்பதும் பிளஸ்

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply