இன்று 2வது டி-20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இன்று 2வது டி-20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும் 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி-20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று இரண்டாவது டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் டி-20 தொடரையும் இந்தியா வென்றுவிடும்

பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, டோனி, மனிஷ் பாண்டே ஆகியோரும் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சஹால் ஆகியோரும் நல்ல நிலையில் இருப்பதால் இந்த தொடரையும் இன்று இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.