இன்று எத்தனை சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது?

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2.34 லட்சம் தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆரம்பித்துவைத்த சிறார்களுக்கான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் இன்று செலுத்தப்பட்டது

இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் மட்டும் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 310 சிறார்களுக்கும் குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1886 சிறார்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

சென்னையில் 4670 சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது