shadow

Income-Tax-Raid

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்
* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக் கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன் படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித்துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண் டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களி லோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளி ல் அல்லது இ.டி.எஃப்.களில் முத லீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய் துவிடுங்கள்… இல் லை என்றால் வருமான வரித்துறை யின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்…

Leave a Reply