டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு குறித்த முக்கிய தகவல்!

துணை ஆட்சியர் உள்பட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர் உள்பட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் அரசு தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

காலியாக உள்ள 18 துணை ஆட்சியர் பணியிடங்கள், 19 டி.எஸ்.பி. பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. ​ உதவி ஆணையர், கூட்டுறவு வங்கிகளின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் நிரப்பப்பட உள்ளதாக, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply