shadow

டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வின் புதிய முடிவுகள் தயாராகி விட்டதாகவும், இந்த முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கான குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த தேர்வின் முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய பணிகளுக்கு நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ள நிலையில் நேர்முகத்தேர்வுகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.