shadow

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 75 நாட்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு டிசம்பர் வரை 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் இனி வரும் காலங்களில் தேர்வு நடத்தும் நேரம் மாற்றப்பட்டுள்ளது எனவும் பாலசந்திரன் தெரிவித்தார்.