TNPL முதல் போட்டியில் தூத்துக்குடி அணி அபார வெற்றி.

TNPL முதல் போட்டியில் தூத்துக்குடி அணி அபார வெற்றி.

tnplஐபிஎல் கிரிக்கெட் போலவே தமிழகத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் தூத்துக்குடி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற்து.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கார்த்திக் 67 ரன்களும், சுஷில் 25 ரன்களும் எடுத்தனர்.

165 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 19.4 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் TNPL போட்டிகளின் முதல் வெற்றியை தூத்துக்குடி அணி பதிவு செய்தது.

Leave a Reply