பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு: தமிழ்நாடு காவல்துறை அதிரடி!

முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் டுவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றன

இந்த ட்விட்டர் கணக்குகளை ஆய்வு செய்த போது அவை பாகிஸ்தானிலுள்ள டுவிட்டர் கணக்குகள் என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து ட்விட்டரில் தவறான தகவல்களை பரப்பிய, பாகிஸ்தானின் சில ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை என தகவல் வெளிவந்துள்ளது.