தமிழகத்தில் தொடரும் அலட்சியம்: கேலிக்கூத்தாகும் ஊரடங்கு உத்தரவு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தான் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வரலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது

ஆனால் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தும் ஒரு சிலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் வைரஸ் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது

இதேபோன்று அலட்சியமாக இருந்ததால்தான் இன்று இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருவதை நாம் பார்க்கின்றோம். இதனை மனதில் கொண்டு தமிழக மக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் இல்லாவிடில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்

காய்கறி மளிகை சாமான்களை வாங்க வெளியே வருபவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். அதேபோல் மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே மருத்துவமனை போன்ற இடங்களுக்கு வெளியே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

Leave a Reply