shadow

முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? சசிகலாவுக்கு எதிராக கொதித்தெழும் பொதுமக்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பில் இருந்த இரண்டு மாதங்களில் வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சனை, மத்திய அரசுடன் இணக்கமான நிலை, எதிர்க்கட்சிகளிடம் அரவணைப்பு, ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான தண்ணீரை கேட்டு பெற்றது, என ஜெயலலிதா கூட செய்யாத பாராட்டத்தக்க பணிகளை தமிழக நலன் கருதி செய்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில் நன்றாக பணி செய்து கொண்டிருந்த ஓபிஎஸ் அவர்களை திடீரென மாற்ற வேண்டிய அவசியம் என்ன பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேள்வி கேட்டு வருகின்றனர். சட்டமன்ற அனுபவமே இல்லாத, அதிமுகவின் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத, எந்த அடிமட்ட தொண்டனையும் இதற்கு முன் சந்திக்காத, முதல்வர் பணி என்றால் என்ன என்றே தெரியாத ஒருவருக்கு முதல்வர் பதவியா? என டுவிட்டரில் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

டுவிட்டரில் எடுக்கப்பட்டு வரும் பல கருத்துக்கணிப்புகளில் 96% சசிகலா பதவியேற்பதை விரும்பவில்லை என்றே கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் பதவியை முதன்முதலாக எதிர்க்கும் நிலை இருப்பதாகவே கருதப்படுகிறது. முதல்வராக பதவியேற்கவிருக்கும் சசிகலா மக்களை எப்படி சமாதானப்படுத்தப்போகிறார், ஆறு மாதங்களில் எப்படி எம்.எல்.ஏ ஆவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply