shadow

அரசியல் ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் என்று இருக்கக் கூடாது: நீதிபதி கிருபாகரன்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு நேரம் வந்துவிட்டதகவும், தமிழக அரசியல் ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் என்று இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ சான்றிதழை வேட்புமனுவுடன் தாக்கல் செய்வதை காட்டாயமாக்க உத்தரவிடக்கோரி ஆனைமலையை சேர்ந்த எஸ்.வி.சுப்பைய்யா என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தரப்பு வாதிகளைக் கேட்ட நீதிபதி, “130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அரசியல் ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் என்று இருக்கக் கூடாது. தமிழகத்தில் 1967 முதல் திரைத்துறை சம்பந்தபட்டவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது.” என்று தெரிவித்தார்.

கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தபோது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply