மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்கள்: தமிழக அரசு புதிய முயற்சி!

பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பணிநியமனம் பெற ஏதுவாக, பாட குறிப்புகள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.