ஊதிய உயர்வை அளித்த தமிழக அரசு!

15 சதவீதம் ஊதிய உயர்வு: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும்

ஆனால் அதே நேரத்தில் ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது