shadow

doctors protestதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் பயிற்சி மற்றும் முதுநிலை டாக்டர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும்பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பயிற்சி டாக்டர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களை விட ஊக்கத்தொகை மிகவும் குறைவாக பெறுவதாகவும், ,அந்த ஊக்கத்தொகையை அதிகரிக்க வலியுறுத்தி அடிக்கடி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் திடீரென அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பயிற்சி மற்றும் முதுநிலை டாக்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு இன்று காலை முதல் வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருச்சி, கோவை, நெல்லை, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தமிழகமெங்கும் நோயாளிகள் அவதியுற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply