அரசு ஊழியர்கள் குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம்: அதிரடி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் இதுவரை 3 லட்சம் மட்டுமே குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது

ஆனால் இனிமேல் அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக அரசு ஊழியர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் 110 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.