ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:

தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னையில் உள்ள கொத்தவால் சாவடி அருகே கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததை அடுத்து சமீபத்தில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது

இதனை அடுத்து கொத்தவால் சாவடியில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் மிகுந்த நஷ்டத்தை அடைந்ததால் தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் கடைகளை திறந்து கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் காலை காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்றும் கடைக்காரர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் கடைக்காரரும் மாஸ்க் அணிந்து அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் கடையில் அவ்வப்பொது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது

Leave a Reply