கேன் குடிநீர் இப்போதைக்கு முடியாதோ? அரசின் அதிரடி முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கேன் வாட்டர் உற்பத்தி சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருவதால் கேன் வாட்டர் வேலைநிறுத்தம் இப்போதைக்கு முடியாது என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக கேன்வாட்டரை நம்பியே இருக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிவரும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவின் அடிப்படையில் காஞ்சிபுரம் உட்கோட்ட பகுதிகளான திம்மசமுத்திரம், கீழ்கதிர்பூர், காலூர், அவலூர், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவந்த 5 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இந்த ஆலைகளின் போர்வெல் இணைப்புகள் மற்றும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 28 ஆலைகள், திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 குடி நீர் ஆலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply