ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவில் மிக அதிக ஊழல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் தமிழகத்தின் ஆ.ராசா, கனிமொழி, ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோர்களின் பெயர்களும் இருந்தன.

இந்த பட்டியலில் தங்கள் கட்சி தலைவர்களின் பெயர்கள் இருந்ததை ஒட்டி கடும் அதிர்ச்சி அடைந்த தமிழக காங்கிரஸ் கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் நேற்று கெஜ்ரிவாலின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் ஆகியோர் மீது ஆம் ஆத்மி பொய்யான குற்றச்சாட்டை கூறி வருவதாக கோவை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்தது. திருவாரூர், மன்னார்குடி, பெரம்பலூர், துறையூர் ஆகிய பகுதிகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் அதிகமான காங்கிரசார் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply