கொரோனா வைரஸ்: ஊடகங்களுக்கு தமிழக முதல்வர் எச்சரிக்கை

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உறுதி செய்யப்படாத செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யாரேனும் கொரோனா காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply