அடுத்தகட்ட ஆலோசனைக்காக சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி

அடுத்தகட்ட ஆலோசனைக்காக சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதை அடுத்து அவர் தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் இந்த வாக்கெடுப்பு ஜனநாயகத்துக்கு விரோதனமானது என்று எதிர்க்கட்சிகளும், ஒபிஎஸ் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் பழனிச்சாமி இன்று பெங்களூர் சிறை சென்று அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றுவது, ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை குறித்த ஆலோசனை நடைபெறும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சசிகலாவின் பினாமி அரசாக செயல்படும் என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கூறிய கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் முதல்வர் சசிகலாவை சந்திக்க செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply