ஜூன் வரை ஊரடங்கு நீடிப்பா?

முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை

இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மருத்துவர் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? அல்லது கைவிடுவதா? என்பது குறித்த முடிவை அவர் மருத்துவர் குழுவின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. கடந்த முறையும் ஊரடங்கு உத்தரவு நீட்டித்தபோது மருத்துவர் குழுவினர்களுடன் அவர் ஆலோசனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு கருத்து தெரிவித்து வருவதாகவும் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வர் இது குறித்து முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply