கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை செய்யவிருப்பதாகவும், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

4ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிச்சாமி கடந்த சில நாட்களாக மருத்துவர் குழுவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்யவிருப்பதாகவும், இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் இருக்கலாம் என்றும், ஆனால் அந்த தளர்வுகள் சென்னைக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply