யார்க்கர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னர் நடராஜன், நேற்று ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றார் என்ற செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

யார்க்கர் மன்னன் நடராஜனும், தமிழக முதல்வரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.