shadow

ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் யார் யார்? நாளை பதவியேற்பு

jayalalithaநடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. எனவே மீண்டும் ஐந்து வருடங்களுக்கு ஜெயலலிதா முதல்வராக தொடர்கிறார்.

இந்நிலையில் நேற்று 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்த ஜெயலலிதா, மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். நாளை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ள அமைச்சரவை பட்டியல் பின்வருமாறு:

01. முதலமைச்சர் – ஜெயலலிதா – பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை
02. நிதி அமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம்
03. வனத்துறை – திண்டுக்கல் சீனிவாசன்
04. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித்துறை
05. செல்லூர் ராஜூ – தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
06. தங்கமணி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை
07. வேலுமணி – உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்
08. ஜெயக்குமார் – மீன் வளத்துறை,
09. சி.வி. சண்முகம் – சட்டத் துறை
10. கே.பி.அன்பழகன் – உயர் கல்வித் துறை
11. வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவு
12. கே.வி. கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் துறை
13. ஆர்.காமராஜ் – உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
14. எம்.சி.சம்பத் – தொழில்துறை
15. ஓ.எஸ். மணியன் – ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
16. உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
17. விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளத்துறை
19. கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை
20. ராஜேந்திர பாலாஜி – ஊரகத் தொழில் துறை
21. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை
22. பெஞ்சமின் – பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை
23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
24. உதயகுமார் – வருவாய் துறை
25. மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்
26. ராஜலட்சுமி – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
27. எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
28. துரைக்கண்ணு – வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
29. கே.சி. வீரமணி – வணிக வரித்துறை

Leave a Reply