சபரிமலையின் தலைமை பூசாரியாக டி.எம்.உன்னிகிருஷ்ணன் நியமனம்

சபரிமலையின் தலைமை பூசாரியாக டி.எம்.உன்னிகிருஷ்ணன் நியமனம்

sabarimalaசபரிமலை கோயிலின் தலைமை பூசாரியாக பாலக்காடு பகுதியைச் சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை பூசாரி பதவிக்காக சுமார் 105 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து சுமார் 15 பேரின் விண்ணப்பம் மெயின் கோயிலுக்கும், 11 பேரின் விண்ணப்பம் மல்லிகாபுரம் கோயிலுக்கும் இறுதிப்பட்டியலாக தேர்வு செய்யப்பட்டது.

இதிலிருந்து ஒருவரை பந்தலம் மாளிகையை சேர்ந்தவர்கள் தேர்வு செய்வது வழக்கம். மலையாள மாதமான துலாம் மாதத்திற்காக சபரிமலையின் நடை திறக்கப்பட்டு வரும் அக்டோபர் 19 வரை சுவாமிக்கு நெய் வைத்தியங்களால் ஆராதனை செய்யப்படும். இதற்கு முன் தலைமை பூசாரியை தேர்வு செய்வது வழக்கம்.

இதன்படி இன்று டி.எம்.உன்னிகிருஷ்ணன் சபரிமலையின் தலைமை பூசாரியாக தேர்வு செய்யப்பட்ட்டார். இவர் இன்னும் ஒரு ஆண்டுக்கு தலைமை பொறுப்பில் நீடித்து பூஜைகளை மேற்கொள்வார் என கோயில் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

TM Unnikrishnan namboothiri is new sabarimala head priest

Leave a Reply