நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

students

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 20 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவித்துள்ளனர்.

நாளை நவம்பர் 30-ஆம் தேதி திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.