திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தை எண்ணும்போது ரூ.1000 திருடிய ஊழியர் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் சென்ட்ரல் பாங்க் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த 59 வயது குருசாமி நாயுடு என்பவர் 1000 ரூபாய் நோட்டு ஒன்றை யாருக்கும் தெரியாமல் தனது வேட்டியில் முடிந்து வைத்தார். இது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த காவலர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் குருசாமி நாயுடு 1000 ரூபாய் நோட்டை திருடியது உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் யாராவது இதுபோன்று பணத்தை திருடியுள்ளார்களா என்று கேமிரா மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply