சந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

சந்திர கிரகணம் எதிரொலி: திருப்பதி கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் வருகிறது. இதனையொட்டி முக்கிய கோவில்களின் நடை சந்திரகிரகணத்தின்போது மூடப்படவுள்ளது.

இந்த நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல் காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்அ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதேபோல் தைப்பூசம் நடைபெறும் பழனி உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சந்திர கிரகணத்தின்போது நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply