ரஜினி கட்சியில் சேருகிறாரா திருநாவுக்கரசு? பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியில் சேருகிறாரா திருநாவுக்கரசு? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டுக்குள் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவருடைய கட்சியில் இணைய அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்பட பல கட்சிகளில் இருந்து பிரமுகர்கள் பலர் இணையத் தயாராக உள்ளனர்

இந்த நிலையில் இன்று காலை திடீரென ரஜினியை அவரது இல்லத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு சந்தித்துள்ளார். அவருடன் அவரது மகன் மருமகள் மற்றும் பேரனும் இருந்துள்ளனர்

இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனது பேரனின் பிறந்தநாள் என்பதால் ரஜினியிடம் வாழ்த்து பெறவே மகன் மருமகள் உடன் சென்று ரஜினியை சந்தித்ததாகவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

மேலும் தான் அவருக்கு எந்தவித அரசியல் ஆலோசனையும் கூறவில்லை என்றும், அவர் யாரிடமும் ஆலோசனை பெறும் நிலையில் இல்லை என்றும், அவருக்கே இங்குள்ள அரசியல் நிலவரம் அனைத்தும் தெரியும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்

Leave a Reply