போலீஸ் ஸ்டேஷனுக்குள் சினிமா பாடலுக்கு டிக் டாக்: பெண் போலீஸ் சஸ்பெண்ட்

போலீஸ் ஸ்டேஷனுக்குள் சினிமா பாடலுக்கு டிக் டாக்: பெண் போலீஸ் சஸ்பெண்ட்

போலீஸ் ஸ்டேஷனுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடி டிக் டாக் வீடியோ வெளியிட்ட பெண் போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் டிக் டாக்மோகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் பெண்கள் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஆர்பிதா சவுத்ரி என்பவர் பாலிவுட் பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ எடுத்து அதனை டிக் டாக் செயலியில் பதிவு செய்துள்ளார்

இந்த வீடியோவை இலட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தொடர்ந்து டிக்டாக்வீடியோக்களை அவர் பதிவு செய்து வருவதாகவும் அவருக்கு லட்சக்கணக்கானவர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமானதை அடுத்து அவர் சொந்தமாக மியூசிக் ஆல்பம் வெளியிடும் அளவிற்கு பிரபலம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply