நீங்கள் எல்லாம் ஆம்பளையா? துணை முதல்வரை பார்த்து கேட்ட துக்ளக் குருமூர்த்தி

நீங்கள் எல்லாம் ஆம்பளையா? துணை முதல்வரை பார்த்து கேட்ட துக்ளக் குருமூர்த்தி

திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டம் நடைபெற்றபோது, அந்தக் கூட்டத்தில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ‘சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார். இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் ’நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க? என்று கேட்டதாகவும், தான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்ததாகவும் கூறினார்.

மேலும் தி.மு.க குடும்பமே கொள்ளை அடிப்பார்கள் என்றும், குடும்ப ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பெரிய சக்தி தி.மு.க தான் என்றும் குருமூர்த்தி பேசினார்

ரஜினி குடும்ப ஆட்சியை கொண்டு வர விரும்பாத நபர், ரஜினிகாந்தை விரைவில் அரசியலுக்கு வர அழைத்தால்தான் தமிழகத்திற்கு ஒரு மாறுதல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply