ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்த இளைஞர்கள்: துண்டுதுண்டாக சிதறி பரிதாப பலி!

ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்த இளைஞர்கள்: துண்டுதுண்டாக சிதறி பரிதாப பலி!

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்ய ரயில் தண்டவாளத்தில் மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்தபோது எதிர்பாராத வகையில் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி பலியாகினர்.

செங்கல்பட்டு அருகே மோகன், பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் தண்டவாளத்தில் நின்றபடி மாறிமாறி வீடியோ எடுத்தபோது அந்த பகுதியில் மின்சார ரயில் வந்தது.

தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்ததால் 3 பேர்களும் ரயில் மோதிய வேகத்தில் துண்டாக சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.